செஞ்சியகரத்தில் திமுக தெருமுனை கூட்டம் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம்: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வழங்கினார்

ஊத்துக்கோட்டை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, செஞ்சியகரம் கிராமத்தில் நடைபெற்ற திமுக தெருமுனை பிரசார கூட்டத்தில், ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.  ஊத்துக்கோட்டை அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில், செஞ்சியகரம் கிராமத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, தெருமுனை பிரசார கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் காட்டம்மாள் லோகநாதன் வரவேற்றனர். பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி,  மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், வர்த்தகர் அணி  தனசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், தலைமை கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் அவைத்தலைவர் ரவிச்சந்திரன், சிவாஜி, சுரேஷ், வி.பி.ரவிக்குமார், சம்சுதீன், சீனிவாசன், சம்பத், அப்புன், முனுசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: