×

மோடியின் நிகழ்ச்சி மைதானத்தில் நாகப்பாம்பு

பாஜ ரத யாத்திரைகளின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 25ம் தேதி தாவணகெரே வருகிறார். இதையொட்டி, பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக தயாராகி வரும் மைதானத்தில் ஜிஎம்ஐடியை ஒட்டியுள்ள 40 ஏக்கர் நிலம் தரைமட்டமாக்கி,  மேடை அமைக்கும் பணிக்காக நேற்று பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாஜ மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல் பூமி பூஜைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த பகுதியில் திடீரென நாகப்பாம்பு காணப்பட்டது. இதை பார்த்ததும், பாஜவினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பாம்பு, அங்கிருந்து வெளியேறி சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



Tags : Cobra ,Modi , Cobra in Modi's show grounds
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...