ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்ட தமிழர்களின் சாம்பல் ஆளுநருக்கு அஞ்சலில் அனுப்பும் போராட்டம்

சென்னை: பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே தபால் அலுவலகம் உள்ளது. இங்கு, நேற்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோர், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை பறிகொடுத்து, தற்கொலை செய்து கொண்ட 42 தமிழர்களின் சாம்பலை, அஞ்சலாக பார்சல் மூலம், தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, அவர்களை பல்லாவரம் போலீசார், ஒருவரை மட்டும் பார்சலை அனுப்ப அஞ்சலகத்தின் உள்ளே அனுமதித்தனர்.

Related Stories: