இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை குமரி ஆபாச பாதிரியாரை பிடிக்க பெங்களூரு விரைந்தது தனிப்படை: 5 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு

நாகர்கோவில்: இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக குமரி ஆபாச பாதிரியார் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூருவில் பதுங்கியுள்ள அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, விளவங்கோடு பாத்திமா நகர் குடல்வால்விளையை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக் அன்டோ (29). அவர் தான் பணியாற்றும் தேவாலயத்துக்கு வந்த இளம்பெண்களுடன் பழகி அவர்களுடன் வாட்ஸ் அப் சாட்டிங் செய்து பின்னர் தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோக்கள் எடுத்து, அதை காட்டியே மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.

அது மட்டுமின்றி பாதிரியாரின் ஆபாச படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் இருந்தவாறு செல்போன் வீடியோ காலில் உரையாடல், முத்தமழை பொழிவது என பல்வேறு காட்சிகள் உள்ளன. ஆபாசமாக வாட்ஸ் அப் சாட்டிங் செய்த பதிவுகளும் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பாதிரியாரின் லீலைகள் குறித்து அறிந்ததும், தட்டி கேட்டதால் மகன் மீது பொய் புகார் அளித்து சிறையில் அடைத்துள்ளனர். எனவே மகனை விடுவிப்பதுடன், பாதிரியார் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்டம் காட்டாத்துறை பிலாவிளை ஆலந்தட்டுவிளையை சேர்ந்த மினி அஜிதா என்பவர், எஸ்பியிடம் புகார் மனு அளித்தார்.

இதுதொடர்பாக அவரிடம் நேற்று முன்தினம் எஸ்.பி. அலுவலகத்தில் ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. அப்போது, பாதிரியாரின் ஆபாச வீடியோக்கள் வெளியானது பற்றி கேட்டதற்கு அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மினி அஜிதா கூறி உள்ளார். இதே போல் பாதிரியார் பெனடிக் அன்டோ மீது கடந்த 11ம்தேதி, பெங்களூருவில் நர்சிங் படிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவரும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சாட் செய்தார்.

பல பெண்களிடம் இவ்வாறாக அவர் நடந்தது தெரிந்து போலீசில் புகார் அளிப்பேன் என்றேன். அதனால் என்னை மிரட்டினார். எனது உயிருக்கே அச்சுறுத்தல் உள்ளது என கூறி இருந்தார். இந்த மாணவியிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து அவர் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடத் தொடங்கினர். இது தெரிந்து பாதிரியார் பெனடிக் அன்டோ திடீரென தலைமறைவானார். அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். அவர் கைதானால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

* பிராமிஸ்...என்னை நம்பு

பாதிரியார் பெனடிக் அன்டோ வாட்ஸ் அப் சாட்டிங் பதிவுகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளன. இளம்பெண்களிடம் ரசனை சொட்ட, சொட்ட பேசி உள்ளார். ‘என் தூக்கத்தை கெடுத்து விட்டாய். உன்னையே நினைத்து கொண்டு இருந்தேன்... என்பதில் தொடங்கி, பல்வேறு ஆபாச பதிவுகளை சாட்டிங் செய்துள்ளார். எதிர்முனையில் சாட்டிங் செய்த பெண் என்னிடம் மட்டும் தான் இப்படி பேசுவீர்களா என்று கேட்க, உன்னிடம் மட்டும் தான் டீ இப்படி பேசுவேன். பிராமிஸ் என்னை நம்பு’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: