சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பவுலிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த அஸ்வினை புகழ்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பவுலிங் தரவரிசையில் முதலிடத்திற்கு மீண்டும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னேறியுள்ளார். தமிழ்நாட்டின் பெருமை என அஸ்வினை, தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் மொத்தமாக 999 பந்துகளை வீசி 25 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஐசிசி பவுலர்களின் தரவரிசையில் 869 ரேட்டிங் உடன் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி, அஸ்வினை பாராட்டியுள்ளார்.

“தமிழ்நாட்டின் பெருமை கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார். இதற்கு நீங்கள் தகுதியானவர் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களது பங்களிப்பை இது உரக்கப் பேசுகிறது. உங்களது அபார கிரிக்கெட் கேரியரில் இதுபோல மென்மேலும் சாதனைகள் வர உள்ளன” எனவும் கூறியுள்ளார்.

Related Stories: