×

ஈரோடு அருகே மாட்டு இறைச்சி கடைகள் இடிக்கப்பட்டதற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்..!!

சென்னை: ஈரோடு அருகே மாட்டு இறைச்சி கடைகள் இடிக்கப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வாரச் சந்தையில் இருந்த 13 மாட்டு இறைச்சி கடைகள் இடிக்கப்பட்டுள்ளது. திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி நிர்வாகம் இடித்து விட்டது. கடை நடத்தியவர்கள் தொடர்ச்சியாக நிர்வாகத்தை அணுகி மீண்டும் தொழில் செய்ய அனுமதி கோரி வருகின்றனர்.

சந்தையில் கோழி, ஆடு, மீன் இறைச்சி கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மாட்டிறைச்சி கடை மட்டும் அகற்றப்பட்டுள்ளது. கடைகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 13 அருந்ததியர் குடும்பங்களும் மீண்டும் கடை நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Erode ,President ,Jawaharlal , Beef Shops, Itippu, Jawahirullah
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு