×

தமிழ்நாட்டில் நேற்றைய மின் நுகர்வு 17,749 மெகாவாட்: அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்றைய மின் நுகர்வு 17,749 மெகாவாட் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டில் இருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டில் இருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் நேற்றைய மின் நுகர்வு 17,749 மெகாவாட் என்று கூறியுள்ளார். நேற்றைய மின்தேவை எந்த தடையுமின்றி ஈடுசெய்யப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்று 17,749 மெகாவாட் மின் நுகர்வு இருந்தது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கடந்த 10ம் தேதி அதிகபட்சமாக 17,647 மெகாவாட் மின் நுகர்வு இருந்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 17,705 மெகாவாட் மின் நுகர்வு இருந்தது. இம்மாதத்தில் வெயில் தாக்கம் கடுமையாகி வருகிறது.  இதனால் வீடுகளில், ஏசி சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால், இம்மாத துவக்கத்தில் இருந்து மின் தேவை 16 ஆயிரம் மெகா வாட் மேல் உள்ளது. விவசாய பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால், அந்த பிரிவுக்கான மின் தேவை  மட்டும் கூடுதலாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் நேற்றைய மின் நுகர்வு 17,749 மெகாவாட் அதிகரித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Minister ,Senthil Balaji ,Twitter , Tamil Nadu, electricity consumption, 17,749 MW, Minister Senthil Balaji
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...