×

வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்திய பிரதமர் மோடி முதலில் கண்­ணா­டியை பார்க்கவேண்டும் : திமுக நாளேடு விமர்சனம்!!

சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டு பேச்சுகளுக்காக அவரை விமர்சிக்கும் பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தம்மை பார்க்க வேண்டும் என திமுகவின் முரசொலி நாளேடு  காட்டமாக சாடியுள்ளது.

திமுகவின் முரசொலி நாளேட்டில் வெளிவந்த தலையங்கம்!!

கண்ணாடியைப் பாருங்கள்!

நாடா­ளு­மன்­றத்­தில் அமளி செய்து கொண்டு இருக்­கி­றது ஆளும்­கட்­சி­யான பா.ஜ.க. ‘எதிர்க்­கட்­சி­கள் என்ன முடக்­கு­வது? இதோ நாங்­களே அதைச் செய்து கொள்­கி­றோம்’ என்று கூச்­சல் செய்து கொண்டு இருக்­கி­றது பா.ஜ.க. எதிர்க்­கட்­சி­க­ளைப் பேச விட்­டால் அவர்­கள் அதா­னியை நினை­வூட்­டிக் கொண்டே இருக்­கி­றார்­கள். அதா­னியை நினை­வூட்­டி­னால் அதற்கு மோடி பதில் சொல்­லி­யாக வேண்­டும். அதானி விவ­கா­ரத்­தைத் திசை திருப்­பு­வ­தற்­காக பா.ஜ.க. கண்­டு­பி­டித்த வழி­தான், லண்­ட­னில் ‘ராகுல் பேசி­யது தவறு’ என்­பது ஆகும்.

‘வெளி­நாட்­டில் போய் இந்­தி­யா­வைப் பற்றி பேசக் கூடாது. ராகுல் பேசி­யது தவறு’ என்று பா.ஜ.க. சொல்­கி­றது. இவ்­வ­ளவு நியா­ய­வான்­கள், இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் ராகுல் பேசி­யதை அனு­ம­தித்­தார்­களா என்­றால் இல்லை. நாடா­ளு­மன்­றத்­தில் அதா­னிக்­கும் மோடிக்­கும் உள்ள தொடர்­பு­கள் குறித்து பக்­கம் பக்­க­மா­கப் பேசி­னார் ராகுல். வெளி­நாட்­டுக்கு எப்­போ­தெல்­லாம் பிர­த­மர் போகி­றாரோ அப்­போ­தெல்­லாம் அந்­தந்த நாட்­டு­டன் வர்த்­த­கத் தொடர்பு அதா­னிக்கு அதி­கம் ஆகி­றதே அது எப்­படி என்று ராகுல் கேட்­டார். தேதி வாரி­யா­கக் கேட்­டார். மோடி­யின் பய­ணத் திட்­டத்­தை­யும் –- அதா­னி­யின் வர்த்­த­கப் பெருக்­கத்­தை­யும் ஆதா­ரங்­க­ளு­டன் வைத்­துக் கொண்டு கேட்­டார். இவை அனைத்­தும் நாடா­ளு­மன்­றக் குறிப்­பு­க­ளில் இருந்து நீக்­கப்­பட்­டன. மக்­க­ள­வை­யில் ராகுல் பேச்­சின் முக்­கி­யப் பகு­தி­க­ளும், மாநி­லங்­க­ள­வை­யில் மல்­லி­கார்­ஜுன கார்கே பேச்­சின் முக்­கி­யப் பகு­தி­க­ளும் நீக்­கப்­பட்­டன. இந்­திய நாடாளு மன்­றத்­தில் பேச அனு­ம­திக்­காத இவர்­கள்­தான் ‘லண்­ட­னில் எப்­படி பேச­லாம்?’ என்று கேட்­கி­றார்­கள்.

லண்­ட­னில் ராகுல் பா.ஜ.க.வை விமர்­சித்­தி­ருந்­தால்­கூட விட்டு வைத்­தி­ருப்­பார்­கள். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கைவைத்­தார். அத­னால்­தான் இவர்­க­ளுக்கு ஆத்­தி­ரம் தலை­தூக்கி ஆட்­டு­விக்­கி­றது. இந்­தி­யா­வின் ஜன­நா­ய­கம் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்று பேசிய ராகுல், இந்­திய ஜன­நா­ய­கத்­துக்கு யாரால் ஆபத்து என்­ப­தைச் சொல்லி இருக்­கி­றார். பிரிட்­டிஷ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் பேசிய ராகுல், ‘இந்­தி­யா­வில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருப்­பது கடி­னம். இந்­தி­யா­வில் அர­சி­யல் தலை­வர்­களே ஸ்பைவேர் மூலம் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கி­றார்­கள். என்­னு­டைய செல்­போ­னில் பெகா­சஸ் உளவு மென்­பொ­ருளை நிறு­வி­யி­ருக்­கி­றார்­கள். இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களை பேச அனு­ம­திப்­பது இல்லை. விவா­தங்­கள் நடத்த அனு­ம­திப்­பது இல்லை’ என்று ராகுல் பேசி­னார்.

இந்­திய விவ­கா­ரங்­களை வெளி­நாட்­டில் போய் பேசத் தொடங்­கி­யதே பிர­த­மர் மோடி­தான் என்­பது அனை­வ­ரும் அறிந்­த­து­தான். 2015 ஆம் ஆண்டு மே மாதம் தென் கொரியா சென்­றார் பிர­த­மர் மோடி. அப்­போது என்ன பேசி­னார் தெரி­யுமா? ‘இந்­தி­யா­வில் ஏன் பிறந்­தோம் என ஒரு காலத்­தில் மக்­கள் கவ­லைப்­பட்­டார்­கள்’ என்று பேசி­னார் அவர். தென்­கொ­ரி­யா­வில் உள்ள இந்­திய சமூ­கத்­தி­ன­ரி­டம் பேசும் போது, ‘‘இதற்கு முன்பு என்ன பாவம் செய்­தோம்? இந்­தி­யா­வில் வந்து பிறந்­து­விட்­டோம் என கடந்த காலங்­க­ளில் மக்­கள் நினைத்­துக் கொண்டு இருந்­தார்­கள். இத­னால் அவர்­கள் இந்­தி­யாவை விட்டு வெளி­யே­றி­னார்­கள். ஆனால் தற்­போது நிலைமை மாறி­விட்­டது. வெளி­நா­டு­க­ளில் அதிக ஊதி­யத்­து­டன் பல்­வேறு துறை­க­ளில் சிறந்து விளங்­கு­ப­வர்­கள் இந்­தி­யா­வுக்கு திரும்ப வேண்­டும் என்று விரும்­பு­கி­றார்­கள்” என்று பேசி­னார்.

‘போன பிற­வி­யில் என்ன பாவம் செய்­தோம், இந்­தி­யா­வில் பிறந்­து­விட்­டோம் என்று பல­ரும் வருத்­தப்­ப­டு­கி­றார்­கள்’ என்று சீனா­வில் பேசி­னார் பிர­த­மர். ‘‘இந்­தி­யா­வில் ஏன் பிறந்­தோம்” என்று கவ­லைப்­பட்­ட­வர்­கள்­தான் இந்­தி­யாவை விட்டு வெளி­யில் சென்று வாழ்­கி­றார்­கள். பாவம் செய்­து­விட்­டோம் என்று நினைத்­த­வர்­கள்­தான் போனார்­களா?

“கைசின்­னம் இருக்­கி­றது, அது 85 பைசாவை உறிஞ்­சி­யது” என்று ஜெர்­ம­னி­யில் பேசி­னார் பிர­த­மர்.2017 ஆம் ஆண்டு இரண்டு நாள் பய­ண­மாக அமெ­ரிக்­கா­வுக்­குச் சென்ற பிர­த­மர் மோடி, ‘‘ஊழல்­களை ஒழிப்­ப­தில் எனது அரசு சாதனை படைத்­துள்­ளது. ஒரு கறை­கூட இல்லை. ஊழல்­தான் இந்­தி­யா­வில் நடந்த ஆட்சி மாற்­றத்­துக்­குக் கார­ணம். இந்­தி­யர்­கள் ஊழலை வெறுக்­கின்­ற­னர்” என்று பேசி­னார். வர்­ஜீ­னி­யா­வில் கூடிய இந்­திய – -அமெ­ரிக்க சமூ­கத்­தி­ன­ரி­டம் இதனை அவர் தெரி­வித்­தார்.

‘தன்­னைப் பாது­காக்க இந்­தியா நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளத் தயங்­காத நாடு என்­பதை எல்­லை­யில் நடந்த துல்­லி­யத் தாக்­கு­தல் காட்­டு­கி­றது. இதனை எந்த நாடும் கேள்வி கேட்­க­வில்லை’ என்­றும் பேசி­னார். ‘இந்­தி­யா­வில் அமல்­படுத்­தப்­பட்­டுள்ள ஜி.எஸ்.டி. வரி முறையை ஒரு ஆய்­வுப் பாட­மாக இங்கு வைக்­க­லாம்’ என்று அமெ­ரிக்க –- இந்­தியா பிசி­னஸ் கவுன்­சில் கூட்­டத்­தில் பேசி­னார். இதுமட்­டு­மல்ல; அமெ­ரிக்­கா­வுக்­குப் போய் ட்ரம்ப்­புக்கு ஆத­ர­வாக பிரச்­சா­ரம் செய்­வ­தைப் போல நடந்து கொண்­டார் பிர­த­மர் மோடி. ‘அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் எளி­தாக அணு­கக் கூடி­ய­வ­ராக இருக்­கி­றார்’ என்­றும், ‘எப்­போ­தும் அன்­பு­ட­னும் நட்­பு­ட­னும் பழ­கு­கி­றார்’ என்­றும், ‘அமெ­ரிக்­கப் பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­தி­ய­வர்’ என்­றும் புகழ்­மாலை சூட்­டி­யது யார்? ‘அப் கி பார் டிரம்ப் சர்க்­கார்’ என்று சொன்­ன­து­யார்?ட்ரம்ப்பை இந்­தி­யா­வுக்கு அழைத்து வந்­தது யார்? ‘அன்று டீ விற்­ற­வர், இன்று இந்­தி­யா­வின் பிர­த­ம­ராக ஆகி இருக்­கி­றார்’ என்று ட்ரம்பை சொல்ல வைத்­தது யார்?

இந்­திய மருத்­து­வர்­கள் குறித்த பிர­த­ம­ரின் விமர்­ச­ன­மும் சர்ச்சை ஆனது. காமன்­வெல்த் மாநாட்­டில் கலந்­து­கொள்ள பிர­த­மர் மோடி லண்­டன் சென்ற போது, அங்கு அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம், “மருத்­து­வர்­க­ளுக்­கும் மருந்து உற்­பத்தியாளர்­க­ளுக்­கும் இடையே தனி உறவு உள்­ளது. பல மருத்­து­வர்­க­ளின் வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் மருந்து உற்­பத்­தி­யா­ளர்­க­ளின் செல­வில் நடை­பெ­று­கி­றது” எனக் கூறி­னார்.

இது குறித்து டில்­லி­யில் உள்ள எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் மருத்­து­வர் சங்­கம் ஒரு கண்­ட­னக் கடி­தத்­தையே பிர­த­ம­ருக்கு எழு­தி­யது. அந்­தக் கடி­தத்­தில், “மருத்­து­வர்­கள் அனை­வ­ரும் மருந்து உற்­பத்­தி­யா­ளர்­க­ளின் செல­வில் வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொண்டு வரு­வ­தாக பிர­த­மர் கூறி­யது கண்­ட­னத்­துக்குரி­யது. மருத்­து­வச் சுற்­று­லா­வாக மருத்­து­வர்­கள் வெளி­நாடு செல்­வதை கொச்­சைப்­ப­டுத்­து­வது போல பிர­த­மர் பேசி உள்­ளார். இத­னால் மருந்­துக் கம்­பெ­னி­க­ளுக்­கும் மருத்­து­வர்­க­ளுக்­கும் பெரும் மனச்­சங்­க­டம் உண்­டாகி இருக்­கி­றது.

ஏதோ ஒரு சில மருத்­து­வர்­கள் இது­போல இருப்­ப­தால் ஒரு வெளி­நாட்டு நிகழ்­வில் இது­போல மருத்­து­வர்­க­ளின் சேவையை கிண்­ட­லுக்­குள்­ளாக்கி இருக்க வேண்­டாம். வெளி­நாட்­டுக்­குச் சென்று ஒரு பிர­த­மர் மருத்­து­வர்­களை கேவ­லம் செய்­வது உலக வர­லாற்­றி­லேயே முதல் தட­வை­யாக நிகழ்ந்­துள்­ளது. மருத்­து­வர்­க­ளின் சேவை­யைப் பற்றி அறிந்த ஒரு பிர­த­மர் இவ்­வாறு கூறு­வது மிக­வும் தவ­றா­னது” என்று சொன்­னார்­கள் அவர்­கள். ராகு­லுக்கு அறி­வுரை சொல்­வ­தற்கு முன்­னால் தங்­க­ளுக்கு முன்­னால் இருக்கும் கண்­ணா­டியை பா.ஜ.க. பார்க்க வேண்­டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : PM Modi ,India , India, Prime Minister Modi,: DMK, Daily
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி