×

இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ரெடியா!.. 2030ம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு!!

பெங்களூரு : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற 2030ம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து முதல்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனிடையே வலலரசு நாடுகளில் பிரபலமாக இருக்கும் விண்வெளி சுற்றுலா திட்டத்தையும் இஸ்ரோ கையில் எடுக்க உள்ளது. இதனை 2030ம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பேசி இருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத், இந்த விண்வெளி சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.6 கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சுற்றுலாவில் பங்கேற்கும் இந்தியர்கள் தங்களை விண்வெளி வீரர் என்று அழைத்துக் கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார். பொதுவாக இது போன்ற சுற்றுலாவில் விண்வெளியின் விளிம்பில் 15 நிமிடங்கள் பயணிகள் செலவிட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Indians ,ISRO , Indians, Space, Tourism, ISRO
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...