தாயை துண்டு துண்டாக வெட்டி அலமாரியில் வைத்த மகள் கைது: 3 மாதமாக சடலத்துடன் வசித்தது அம்பலம்

மும்பை: மும்பை லால்பாக்கில் உள்ள ஒரு குடியிருப்பில், 55 வயது தாயும், அவரது 23 வயது மகளும் வசித்து வந்துள்ளனர். கடந்த ஒரு சில மாதங்களாக தாயின் சகோதரர் பல முறை வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் தாய் வீட்டில் இல்லை என்று கூறி மகள் அனுப்பி விட்டார். சமீபத்தில் வீட்டுக்கு சென்றபோது துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை காலாசவுக்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 போலீசார் சென்று விசாரித்த போது தனது தாயார் தூங்கிக் கொண்டிருப்பதாக அங்கிருந்த இளம்பெண் கூறினார்.   போலீசாரை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீசார் அதிரடியாக உள்ளே சென்றனர்.

அப்போது,  படுக்கை அறையில் இருந்த ஒரு அலமாரிக்குள் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் தாய் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தின் சில பாகங்கள், தண்ணீர் தொட்டியில்  அழுகிய நிலையில் கிடந்தன.  அந்த சடலத்தை கேஇஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   மகள்தான் தாயை கொலை செய்து, சடலத்தை துண்டுதுண்டாக வெட்டி அலமாரியில் வைத்துள்ளார் எனவும், 3 மாதமாக அந்தப் பெண் தாயின் சடலத்துடன் வீட்டில் வசித்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர். எதற்காக தாயை கொன்றார் என்று இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: