எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு: மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!!

சேலம்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டதால் எடப்பாடி பழனிசாமி உட்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செம்மொழி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். கோவையில் பொள்ளாட்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜெயராமன், சூளூர் கந்தசாமி, அம்மன் அர்ஜுன் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் 8 பேர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Related Stories: