கர்நாடக பாஜக எம்எல்ஏ ஆர்.சங்கர் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் பறிமுதல்!

பெங்களூரு: கர்நாடக பாஜக எம்எல்ஏ ஆர்.சங்கர் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வணிகத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பரிசுப்பொருட்கள் சிக்கியது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.40 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 6,000 புடவைகள், 9,000 குக்கர் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரிசுப் பொருட்கள் வைத்திருந்ததற்கான காரணம் குறித்து பாஜக எம்.எல்.சி.யான சங்கர் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: