×

சிறுவாபுரி முருகன் கோவிலில் நடை மூடப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாக்குவாதம்.. கோவில் கதவை இழுத்ததால் பரபரப்பு.

திருவள்ளூர்  : திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. நேற்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து இரவும்  சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். எனினும் குறிப்பிட்ட நேரத்தில் கோவில் நடையும், கதவும் மூடப்பட்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் விரக்தியடைந்தனர். தொடர்ந்து கோவில் ஊழியர்களிடம் கதவை திறந்து தங்களை கோவிலுக்குள் அனுமதிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவிலின் கதவையும் பக்தர்கள் இழுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Churuvapuri Murugan Temple , Siruvapuri, Murugan, Temple, Devotees, Argument
× RELATED மோசடி நபர்கள் குறித்து எச்சரிக்கை...