ஆளில்லா விமானத்தை இடைமறித்து அழித்த ரஷ்யாவின் ஜெட் விமானம் :'பொறுப்பற்ற செயல்'எனக் அமெரிக்கா கண்டனம்!!

வாஷிங்டன் : ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் தங்கள் நாட்டின் ஆளில்லா விமானத்தை ரஷ்யாவின் ஜெட் விமானம் இடைமறித்து அழித்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் எம்கியூ-9 என்ற ஆளில்லா விமானம், சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்தி வந்துள்ளது. அப்போது ரஷ்யாவின் எஸ்யூ-27 என்ற போர் விமானத்தால் அது இடைமறித்து தாக்கப்பட்டதாக அமெரிக்க விமானப்படை தளபதி ஜேம்ஸ் ஹெக்கர் கூறியுள்ளார்.

இதன் விளைவாக எம்கியூ-9 ட்ரோன் விமானம் விபத்துக்குள்ளாகி முழுமையாக சேதம் அடைந்ததாகவும் ரஷ்யர்களின் இந்த பாதுகாப்பற்ற செயல்களால் கிட்டத்தட்ட 2 விமானங்களும் பாதிப்பிற்கு உள்ளாகின என்றும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் இடைமறிப்புகள் பொதுவானவை என்றும் ஆனால் இம்முறை நடந்த இடைமறிப்பு பாதுகாப்பற்றது மட்டுமின்றி அறமற்ற செயல் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடகியர்பாளர் ஜான் கிர்பி  கூறியுள்ளார். ரஷ்யாவின் இந்த பொறுப்பற்ற செயல் அமெரிக்க விமானத்தை அழிக்க வழிவகுத்தது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: