×

பிளஸ்1 பொதுத்தேர்வு தொடக்கம் காஞ்சிபுரத்தில் 13,000 மாணவர்கள் தேர்வு எழுதினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் பிளஸ்1 படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்வு எழுதினார்கள். தேர்வு தொடங்குவதற்கு முன் கோயிலுக்கு சென்று சாமியை வணங்கியும், ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்றும் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ளவர்களின் விவரம் வருமாறு: தமிழ்நாடு முழுவதும் பிளஸ்1 படிக்கு மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று முதல் ஏப்ரல் மாதம் 5ம்தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்வுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு  மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான பொதுத்தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 7  வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு, 7 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள்,  14 கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 53 தேர்வுமையங்களுக்கு 53  முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 2 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர், 53  துறை அலுவலர்கள் மற்றும் 3 கூடுதல் துறை அலுவலர்கள், 12 வழித்தட  அலுவலர்கள், 80 பறக்கும்படை அலுவலர்களும், 900 அறை கண்காணிப்பாளர்களும்,  சொல்வதை எழுதுபவர்களாக 54 பேரும் என தேர்வு மையங்களுக்கு நியமனம்  செய்யப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 மாணவர்கள், 7023 மாணவிகள் என மொத்தம் 13,114 பேர் நேற்று அரசு பொதுத்தேர்வினை எழுதினர். இதில், காஞ்சிபுரம் ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளியில்  பிளஸ்1 படிக்கும் மாணவ, மாணவிகள் 440 பேர் அரசு பொதுதேர்வினை எழுதினார்கள். முன்னதாக, தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அனைவரும், பள்ளியின் தாளாளர் அருண்குமார், மேலாளர் ரமேஷ் ஆகியோரிடம் ஆசி பெற்றனர். அப்போது, அவர்கள், தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும் என அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Kanchipuram , 13,000 students appeared in Kanchipuram for Plus1 public examination
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...