×
Saravana Stores

ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படும் சாலமங்கலம் சாலை: சீரமைக்க பொதுமக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்:படப்பை அருகே ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படும் சாலமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்க கோரிக்கை வைத்துள்ளனர். குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சியில் சாலமங்கலம், நரியம்பாக்கம், சிறுமாத்தூர் ஆகிய கிராமங்கள் அடங்கி உள்ளன. இங்கு சாலமங்கலம், நரியம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் வண்டாலூர் - வாலாஜாபத் சாலையை இணைக்கும் சாலமங்கலம் இணைப்பு சாலையை பயன்படுத்தி படப்பை, தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை சுமார் வரை 2 கிலோ மீட்டர் நிளம் உள்ளது.

தற்போது, இந்த சாலை முழுவதும் ஜல்லிகற்கள் பெயர்ந்தும், சில இடங்களில் குண்டும், குழியுமாகவும் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் கனரக லாரிகள், மினிலோடு வேன், ஆட்டோ, கார், பைக் போன்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும், இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை கோரிக்கைவைத்தும் பலனிவல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், சாலமங்கலம் பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால், படப்பை பகுதியல் உள்ள அரசினர் பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிளில் வந்து செல்கின்றனர். அவர்களில் சைக்கிளில் கூட செல்ல முடியாத நிலையில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, சேதமடைந்த சாலமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : Salamangalam road , Salamangalam road with shifting gravel: public demand for repair
× RELATED ஆம்னி பேருந்து குறித்து எந்த புகாரும்...