×

டிஆர்டிஓ உருவாக்கிய மருந்துக்கு அனுமதி

புதுடெல்லி: டிஆர்டிஓ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முக்கியமான மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் உள்ள கதிரியக்க மற்றும் அணு மருத்துவம் அது சார்ந்த அறிவியல் கழகத்தின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில்  உருவாக்கப்பட்ட  மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ‘புருஷியன் ப்ளூ’  கரையாத  மருந்தானது தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின்  கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. புருஷியன் ப்ளூ மருந்தை தயாரித்து விற்பதற்கான உரிமம் இமாச்சலப்பிரதேசம், குஜராத்தை சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Tags : DRDO , DRDO developed drug approval
× RELATED இந்திய விமானப்படைக்கு 5ம் தலைமுறை போர்...