×

விமானத்தில் புகைப்பிடித்த விவகாரம் ஜாமீனுக்கு ரூ.25000 செலுத்த மறுத்து சிறை சென்ற பயணி

மும்பை: ஏர் இந்தியாவின் லண்டன் - மும்பை விமானத்தில் கழிவறையில் புகைப்பிடித்தததாக விமான பயணி ரத்னாகர் திவிவேதி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது அவருக்கு ரூ.25,000 ரொக்க ஜாமீன் வழங்கியது. ஆனால் அதற்கான தொகையை செலுத்த மறுத்த அவர் தான் சிறைக்கு செல்வதற்கு தயாராக இருப்பதாக  தெரிவித்தார். மேலும் ஐபிசி பிரிவில் வழக்கு பதிவு செய்தால் ரூ.250 அபராதம் செலுத்த வேண்டும் என ஆன்லைனில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வேண்டுமென்றால் அந்த தொகையை செலுத்துவதாகவும், ரூ.25000 ஜாமீன் தொகையை செலுத்த முடியாது என்றும் விமான பயணி தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்று அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags : Passenger who refused to pay Rs 25,000 as bail for smoking on the plane went to jail
× RELATED இந்திய மக்கள் மாற்றத்தை...