×

வட்டாட்சியர் அலுவலம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். கும்மிடிபூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் 61 ஊராட்சிகளை சேர்ந்த கிராம அலுவலர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று
நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் எம். பிரபு தலைமை வகித்தார். வட்ட தலைவர் ஜான் பிரிட்டோ, செயலாளர் பழனி, பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட துணை தலைவர் ஜோதி பிரகாசம் தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டர் வழங்குதல், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு, கூடுதல் பொறுப்புதியும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில், 10க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Tags : Village ,Administrative Officers ,District Collector , Village Administrative Officers strike in front of District Collector's office
× RELATED மேலநம்மங்குறிச்சி, உப்பூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்