×

திருவள்ளூரில் பார்வையற்ற தம்பதிக்கு வாழ்நாள் முழுவதும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்: அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

திருவள்ளூர்: திருவள்ளூரில் பார்வையற்ற தம்பதிக்கு வாழ்நாள் முழுவதும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருவள்ளூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் பெருமாள்பட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் த.எத்திராஜ், ஒன்றிய சேர்மன் ஜெ.ஜெயசீலி ஜெயபாலன், துணை சேர்மன் எம்.பர்கத்துல்லாகான், ஜெயபுகழேந்தி, கே.கே.சொக்கலிங்கம், கே.தரணி, எஸ்.சாமுண்டீஸ்வரி சண்முகம், டி.கே.சீனிவாசன், டி.எம்.ராமச்சந்திரன், டி.டி.தயாளன், டி.தென்னவன், வி.என்.சிற்றரசு, எஸ்.என்.குமார், டி.எஸ்.குருபரதன், ஏ.வரதன், எஸ்.சௌந்தர்ராஜன், த.சுகுமார், கே.ஏ.அபினாஷ், இ.அருண்கீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பிரதிநிதி எஸ்.பரமேஸ்வரன், நிர்வாகிகள் க.கௌரி கஜேந்திரன், பெருமாள் பட்டு கோபி கே.ஜெகதீசன், ராஜா, ஏ.தினகரன், ஆர்.சுரேஷ்பாபு, எஸ்.நடராஜன், கே.என்.ராஜாராம், சி.ரமேஷ், எஸ்.அகஸ்டின், வி.பத்மநாபன், வி.சுமன், எஸ்.இளங்கோவன், ராமச்சந்திரன், கே.முகுந்தன், எம்.பிரபு, எம்.லோகநாதன், ரவிச்சந்திரன், கே.பிரகாஷ், வி.ஜெகன், டி.துரைராஜ், எஸ்.ராஜசேகர், சி.பார்த்தசாரதி, வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.அசோக்ராஜ் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர், ஆதி திராவிடர் நலக்குழு செயலாளரும், பூந்தமல்லி எம்எல்ஏ வுமான ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் பெருமாள் பட்டி திமுக சார்பில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி கோவிந்தராஜ் -  விஜயா தம்பதியினருக்கு வாழ்நாள் முழுவதும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட மளிகைப் பொருட்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், மேலும் இஸ்திரி பெட்டிகளையும், 15 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலைகள் உள்பட பழங்களையும், 500 பெண்களுக்கு சேலைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினர்.

அப்போது அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசியதாவது, நமது முதல்வர் எம்எல்ஏ, மாநகர மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என படிப்படியாக உயர்ந்து முதலமைச்சர் ஆகியிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி போல் தவழ்ந்து வந்து காலை பிடித்து முதல்வர் ஆகவில்லை என்றார். தமிழக முதல்வர் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை உள்பட ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி அதனை முறைப்படி செயல்படுத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் பெற்ற வெற்றி தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைக்காக கிடைத்த வெற்றி என்றார்.

இதில் பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.முனிரத்தினம், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், சி.ஜெரால்டு, ம.ராஜி, வி.ஜே.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், பா.நரேஷ்குமார், ஜி.விமல்வர்ஷன், ஜெ.மகாதேவன், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் டி.தேசிங்கு, சன் பிரகாஷ், சே.பிரேம் ஆனந்த், த.தங்கம்முரளி, ஜி.ஆர்.திருமலை, தி.வே.முனுசாமி, ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், மற்றும் பரமேஸ்வரி கந்தன், வி.ஜே.உமா மகேஸ்வரன், ஆர்.பிரவீன்குமார், எஸ்.சிவபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எம்.சக்திவேல் நன்றி தெரிவித்தார்.


Tags : Tiruvallur ,MLA , Lifelong grocery scheme for blind couple in Tiruvallur: Minister, MLA launches
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...