×

அமிர்தசாஸ்-கொல்கத்தா இடையே சென்ற ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை கைது செய்தது போலீஸ்

கொல்கத்தா: அமிர்தசாஸ்-கொல்கத்தா இடையே சென்ற ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைது செய்தனர். அகல் தக்த் விரைவு ரயிலில் கணவருடன் சென்ற பெண் பயணி மீது மதுபோதையில் இருந்த டிடிஆர் சிறுநீர் கழித்ததாக புகார் அளித்துள்ளனர். பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை பணியில் இருந்து நீக்கி ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அமிர்தசரஸில் இருந்து கொல்கத்தா நோக்கி அகல் தக்த் எக்ஸ்பிரஸ் நேற்று நள்ளிரவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் , தனது கணவர் ராஜேசுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். நல்ல உறக்கத்தில் இருந்த அந்த பெண்ணின் மீது டிக்கெட் பரிசோதகர் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் உறக்கம் கலைந்து பார்த்த அந்த பெண் அலறவும், ரயிலில் இருந்தவர்கள் டிக்கெட் பரிசோதகரைப் பிடித்து அடித்து உதைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ராஜேஷ், ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதுகுறித்து ரயில்வே போலீஸ் அதிகாரி சஞ்சீவ்குமார் சின்ஹா கூறுகையில், பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், பயணி மீது சிறுநீர் கழித்தவர் டிடிஆர் முன்னா குமார் என்பது தெரிய வந்தது. அவரை சார்பாக் ரயில் நிலையத்தில் இன்று கைது செய்துள்ளனர். அவர் அந்த பெண்ணின் படுக்கைக்கு மேல் படுக்கையில் இருந்தார். அவர் தூக்கத்தில் அல்லது மயக்கத்தில் சிறுநீர் கழித்திருக்கலாம் என்று கூறினார். ஆனால், பிடிபட்ட டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார் குடிபோதையில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.


Tags : Amritsar ,Kolkata , Police arrest ticket inspector for urinating on female passenger on Amritsar-Kolkata train
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...