×

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையினை துவக்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று 14.03.2023 துவக்கி வைத்தார். பின்னர், 2,539 பயனாளிகளுக்கு ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என்று பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் பொறித்த பெயர் பலகையினையும் திறந்து வைத்தார்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி 2021-2022 ஆம் ஆண்டு பாரத பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரால் 12.01.2022 அன்று காணொளிக் காட்சியின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் 14.03.2023 அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பல்வேறு மருத்துவ சேவையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இதில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவினை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்பு சிகிச்சைப் பிரிவினை திறந்து வைத்து இப்பிரிவில் உள்ள அதிதீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவினையும் பார்வையிட்டு மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் இன்றைய தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கை வசதிகளுடன் ஐந்து தளங்களைக் கொண்டதாகும். இதன் தரைத்தளத்தில் அவசரப்பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு மற்றும் புற நோயாளிகள் பிரிவுடன் தனிமைப்பிரிவில் 24 படுக்கை வசதிகளும், அவசரப்பிரிவில் 27 படுக்கை வசதிகளும் கொண்டதாகும். இதன் முதல் தளத்தில் குருதி வங்கி, இ.என்.டி., புற நோயாளிகள் பிரிவு, காசநோய் மற்றும் மார்பு புற நோயாளிகள் பிரிவு செயல்படுவதுடன் மீட்புப்பிரிவில் 10 படுக்கை வசதிகளும் கொண்டதாகும்.

இதன் இரண்டாம் தளத்தில் நிர்வாக அலுவலகம், கண் மருத்துவப்பிரிவு, பல் பிரிவு, மனநலப் பிரிவு, தோல் மருத்துவப்பிரிவு செயல்படுவதுடன் பொது மருத்துவப்பிரிவில் 90 படுக்கை வசதிகளும் கொண்டதாகும். இதன் மூன்றாம் தளத்தில் பொது மருத்துவப்பிரிவு, பொது அறுவை சிகிச்சைப்பிரிவு, காசநோய் மற்றும் மார்புப்பிரிவு செயல்படுவதுடன் பொது மருத்துவப்பிரிவில் 60 படுக்கை வசதிகளும், பொது அறுவை சிகிச்சைப்பிரிவில் 90 படுக்கை வசதிகளும், காசநோய் மற்றும் மார்புப்பிரிவில் 20 படுக்கை வசதிகளும், மனநலப் பிரிவில் 16 படுக்கை வசதிகளும் கொண்டதாகும்.

இதன் நான்காம் தளத்தில் ஆப்டல் பிரிவு, இ.என்.டி., வார்டு மற்றும் இ.என்.டி., துறை ஊழியர்கள் அறைகளுடன் ஜ.எம்.சி.யு., 16 படுக்கை வசதிகளும், பொது அறுவை சிகிச்சைப்பிரிவில் 30 படுக்கை வசதிகளும், தோல் மருத்துவப்பிரிவில் 20 படுக்கை வசதிகளும், கண் மருத்துவப்பிரிவில் 90 படுக்கை வசதிகளும், ஆப்டல் பிரிவில் 15 படுக்கை வசதிகளும், இ.என்.டி., பிரிவில் 15 படுக்கை வசதிகளும் கொண்டதாகும். இதன் ஐந்தாம் தளத்தில் ஆபரேஷன் தியேட்டர்கள், விரிவுரையரங்கு, பொது அறுவை சிகிச்சை வார்டு மற்றும் பல்துறை ஊழியர்கள் அறைகளுடன் ஆப்டல் பிரிவில் 15
படுக்கை வசதிகளும், மீட்புப்பிரிவில் 24 படுக்கை வசதிகளும், அறுவை சிகிச்சைக்குப்பின் அறுவை சிகிச்சை வார்டு 30 படுக்கை வசதிகளும் கொண்டதாகும்.

இம்மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு, கண் சிகிச்சைப்பிரிவு, மனநல மருத்துவப் பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு, இருதய சிகிச்சைப்பிரிவு உட்பட 26 சிகிச்சை பிரிவுகளில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது. நாளொன்றுக்கு உள் நோயாளிகளாக 450 நபர்களுக்கும், புற நோயாளிகளாக 1800 நபர்களுக்கும் சிகிச்சைகள் வழங்கிட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்னுயிர் காக்கும் திட்டம், சிடி ஸ்கேன், மெமோகிராம், இணைய அடிமை மருத்துவம், முதியோர் புற்று நோய் பரிசோதனை, தொலைதொடர்பு மருத்துவம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், பச்சிளம் குழந்தைகள் பிரிவு போன்ற இதர சிறப்பு மருத்துவ அம்சங்களும் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் வழங்கும் வகையில் புகழ்பெற்ற 147 மருத்துவர்களும் இம்மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சென்ற கல்வியாண்டில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கு 149 மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் 10 மாணவர்களும், மாநில ஒதுக்கீட்டின்படி 118 மாணவர்களும், ஒதுக்கீட்டின்படி 21 மாணவர்களும் கல்லூரியில் சேர்ந்து தற்போது இரண்டாம் ஆண்டு படித்து அனைத்திந்திய வருகின்றனர். நடப்பு ஆண்டில் இளங்கலை மருத்துவ முதலாமாண்டு படிப்பிற்கு 150 மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதில் சதவீத ஒதுக்கீட்டின் 7.5 அடிப்படையில் 10 மாணவர்களும், சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 2 மாணவர்களும், மாநில ஒதுக்கீட்டின்படி 115 மாணவர்களும், அனைத்திந்திய ஒதுக்கீட்டின்படி 23 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இதில் தமிழக மாணவர்கள் 127 மாணவர்களும், இதர மாநில மாணவர்கள் 23 மாணவர்களும் பயின்று வருகின்றனர். இதில் தமிழ்வழி கல்வி கற்றல் முறையில் பயின்ற 10 மாணவர்கள் சேர்ந்திருப்பது சிறப்பாகும்.

மேலும் இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் மூலம் 2022-23 ஆம் கல்வியாண்டில் மருத்துவக் கல்வி பயில தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், ஆய்வக உபரகணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 650 பயனாளிகளுக்கு ரூ.5,22,15,000 மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கடனுதவிகளும், மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் சார்பில் 10 மருத்துவ மாணவர்களுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவக் கல்வி உபகரணங்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 696 பயனாளிகளுக்கு ரூ.78,19,750 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணம், பட்டா மாறுதல் ஆணை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பில் வேளாண் இடுபொருட்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.87,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 1,166 பயனாளிகளுக்கு ரூ.7,50,33,000 மதிப்பில் கூட்டுறவு கடனுதவிகளும் மொத்தம் 2.539 என பயனாளிகளுக்கு ரூ.13,68,55,250 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ சேவையினை துவக்கி வைத்ததன் தொடக்கமாக புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை நுழைவு சீட்டுகளையும் வழங்கினார்.

பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம்” என்று பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் பொறித்த பலகையினை திறந்து வைத்து அரங்கினைப் பார்வையிட்டார்.


இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு முதன்மை செயலாளர்/ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முனைவர்.ப.செந்தில்குமார். இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி. இ.ஆ.ப., சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல்.திருமாவளவன், மருத்துவக் கல்வி இயக்குநர் இரா.சாந்தி மலர் , அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அ.முத்துகிருஷ்ணன்  உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் கலந்துகொண்டனர்.


Tags : Minister ,Udhayanidhi Stalin ,Ariyalur Government Medical College Hospital , Ariyalur Government Medical College Hospital, Medical Services, Minister Udayanidhi Stalin
× RELATED காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சி...