சென்னை ஐஐடி மாணவன் தற்கொலை; பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை: ஐஐடி நிர்வாகம் விளக்கம்

சென்னை: சென்னை கோட்டூர் புறத்தில் செயல்பட்டு வரும் ஐஐடி வளாகத்தின் ஆண்கள் விடுதியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்துவரும் மாணவர் தூக்கிட்டு தரக்கொலை செய்துகொண்டுள்ளார். விடுதியில் நீண்டநேரமாக கதவு திறக்கப்படாத காரணத்தால் மற்ற மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவன் புஷ்பக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மாணவனின் உடலை கைப்பற்றிய கோட்டூர்புரம் போலீசார் ராயபேட்டை மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைகாக கொண்டு சென்றனர்.

ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் 2 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து தற்போது புஷ்பக் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து படிப்பின் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தால் இந்த தற்கொலைகள் ஏற்படுகிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து ஈட்டி வளாகத்தில் இருக்க கூடிய ஆசிரியர்களிடமும் விசாரணையானது நடைபெற்று வருகிறது. தற்கொலைக்கான காரணம் விசாரணையில் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் தற்கொலை தொடர்பாக ஐஐடி நிர்வாகம் விளக்கம்

பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்ததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என ஐஐடி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஐஐடி மாணவர்கள் பல்வேறு சமூக அழுத்தத்திற்கு உள்ளாகி இறுகின்றனர். பொருளாதாரம், குடும்பப்பிரச்சனை, மன அழுத்தம்  காரணமாகவே மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருவதாக ஐஐடி நிர்வாகம் கூறுகிறது. மாணவன் புஷ்பக் தற்கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடப்படும் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: