இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி கேப்டனாக ஸ்மித் நியமனம் என தகவல்.! மார்ச் 17ம் தேதி மும்பையில் முதல் போட்டி

மும்பை: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி கேப்டனாக ஸ்மித் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

4வது போட்டி டிரா ஆனது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போடிக்கு முன்னேறியது இந்தியா. ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. டெஸ்ட் தொடர் முடிவைந்ததால் அடுத்து ஒருநாள் தொடருக்கு இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இரு அணிகளுக்கும் இடையிலான முதலாது ஒருநாள் போட்டி வரும் 17ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் பேட் கம்மின்ஸ் அவரது தாயார் மறைவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்றால் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த பேட் கம்மின்ஸ் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னரே ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றார். 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலேயே ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும், மற்றொரு போட்டியில் டிராவும் கண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: