×

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் சார்பில் 50-வது பிரிட்ஜ் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழிநுட்பவியல் சார்பில் 50-வது பிரிட்ஜ் கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை நடத்தும் கருத்தரங்கை முதல்வர் தொடங்கி வைத்தார். தகவல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்கள் ஆயத்தம் செய்ய ஒப்பந்தமும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தமும்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. கருத்தரங்கில் பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

தொழில்நுட்பம் உலகை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துள்ளது. தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதலில் வடிவமைத்தது திமுக அரசு என்று முதல்வர் கூறியுள்ளார். 1997-ம் ஆண்டு முதன்முதலாக தகவல் தொழில்நுட்ப கொள்கையை கலைஞர் வகுத்து கொடுத்தார். 1998-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்திற்கு என தனி துறையை உருவாக்கியது கலைஞர் என்று கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னேறிருப்பதற்கு காரணம் கலைஞர். தகவல் தொழில் நுட்பத்துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது. உலகத்தில் ஒரு முலையில் நடக்கும் நிகழ்வு மற்றொரு மூலைக்கு உடனே கிடைத்து விடுகிறது. தனி மனித பாதுகாப்பை உறுதி செய்ய தொழில்நுட்ப வளர்ச்சி இன்றியமையாதது.

தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தவர் கலைஞர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பெரிய பங்கற்றி வருகிறார். அரசு துறைகளை டிஜிட்டல் மயமாக்கும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

ஐ.டி தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் வரக் காரணம் கலைஞர். மின் ஆளுமை திட்டத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப அகாடமி திமுக ஆட்சியில்தான் முதல்முறையாக உருவாக்கப்பட்டது. இளைய தலைமுறைகள் தகவல் தொழில்நுட்பத்தை தங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை பலி வாங்குகிறது என்று தகவல் தொழில்நுட்பவியல் சார்பில் 50-வது பிரிட்ஜ் கருத்தரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



Tags : Chief Minister ,M.K.Stalin ,50th Bridge Seminar ,Information Technology ,Nandambakkam Trade Center ,Chennai , Commerce Centre, Information Technology, 50th Bridge Seminar inaugurated by Chief Minister M.K.Stalin
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து