×

தாம்பரத்தில் காதலியை கொன்ற வழக்கில் ஜாமினில் வெளியே வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: கொலையா என போலீசார் சந்தேகம்..!!

நாகை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலியை கழுத்தை அறுத்து கொன்ற நாகை பொறியாளர் இளைஞர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த நிலையில், சந்தேகமான முறையில் மரணமடைந்துள்ளார். நாகை மாவட்டம் ஆதமங்கலம் கிராமம் சேர்ந்த பொறியாளர் 27 வயதான ராமச்சந்திரன், தனது காதலியை கொன்ற வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் ஜாமினில் விடப்பட்ட அவர், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தார். ஆனால் நேற்று வீட்டுக்கு பின்னால் உள்ள புளியமரத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சென்னையில் வேலை செய்து வந்த ராமச்சந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 21 வயதான சுவேதா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

2021ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் சுவேதாவுடன் வாக்குவாதம் செய்த ராமச்சந்திரன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். தன்னுடைய கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். காப்பாற்றப்பட்ட அவர் ஓராண்டு காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே இருந்த ராமச்சந்திரன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Tambaram , Tambaram, girlfriend, youth, suicide by hanging
× RELATED தாம்பரம் அருகே முடிச்சூரில் இருசக்கர...