×

காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டம்; இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி ஆணை: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கருணை அடிப்படையில் 4 பேருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளருக்கான  பணி நியமன ஆணையை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.

திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை வாங்கி, அதனை சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.  இதற்கு, கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 322 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  

அதன் அடிப்படையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலகில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடையில் இறந்த, வருவாய்த்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் 4 பேருக்கு, இளநிலை வருவாய் ஆய்வாளர்கான பணி நியமன ஆணையை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, தனி துணை கலெக்டர் சுமதி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanchipuram People's Grievance Meeting; Junior Revenue Inspector Work Order: Issued by Collector Aarti
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...