மேற்கு வங்கத்தில் இருந்த கடத்திய 18 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆலந்தூர்: பரங்கிமலை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்து விற்பதாக பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ரத்தினகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை பெட்ரோல் பங்க் அருகே நேற்று சந்தேகப்படும் வகையில் ஒரு மூட்டையுடன் நின்றுகொண்டிருந்த நபரை விசாரித்து, அவரது மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா இருந்தது உறுதியானது. பின்னர் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த லல்லு மண்டேல் (41) என்பதும், இவர் மேற்குவங்காளத்தில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 18 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: