×

கிருஷ்ணரை போல் செயல்படுகிறார் யோகி: புகழ்ந்து தள்ளினார் கட்கரி

கோரக்பூர்: உபி மாநிலம் கோரக்பூரில் நடந்த விழாவில் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: உ.பி.யில் குற்றங்களைக் கட்டுப்படுத்த கடந்த 6 ஆண்டுகளில் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நான் என் மனைவியிடம் சொன்னபோது. எப்பொழுது அநியாயம் நடந்தாலும் அவதாரம் எடுத்து தீமையை ஒழிப்பேன் என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளது பற்றி அவள் என்னிடம் சொன்னாள். பகவான் கிருஷ்ணரைப் போலவே, முதல்வர்யோகியும் மென்மையான மக்களைப் பாதுகாப்பதற்காக அதே வழியில் ஆபத்தானவர்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இவ்வாறு அவர் புகழ்ந்து தள்ளினார்.

Tags : Yogi ,Krishna ,Gadkari , Yogi acts like Krishna: Gadkari praised
× RELATED மக்கள் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண...