ஹிஜாப் போராட்டத்தில் கைதானோர் உட்பட ஈரானில் சிறையில் இருக்கும் 82,656 பேருக்கு மன்னிப்பு

துபாய்: ஈரானின் குர்திஸ்கான் மாகாணத்தில் கடந்த செப்டம்பரில் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறப்பு படை போலீசார் மாஷா அமினி(22) என்ற இளம்பெண்ணை கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்தபோது கோமா நிலைக்கு சென்ற அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு எதிராக அங்கு போராட்டம் வெடித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவர்களை ஆங்காங்கே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டனர் என்ற உண்மை விவரங்கள் வெளிவரவில்லை. 19,700 பேர் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்நிலையில் ஈரானின் நீதித்துறை தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி சிறையில் இருக்கும் 82,656 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிக்கையில், சிறையில் இருக்கும் மொத்தம் 82,656 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 22,000 பேர் போராட்டங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் திருட்டு மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்களில் 22ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இருந்து தெரியவந்துள்ளது.

Related Stories: