×

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு: மொழித்தாள் மிக எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி..!!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மொழித்தாள் தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். 2022 - 23ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றில் இருந்து அடுத்த மாதம் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுவதால் 3225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது.

திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர் ஒருவரை நிறுத்தி வினாத்தாளை வாங்கி படித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தேர்வு எப்படி இருந்தது என மாணவர்களிடம் கேட்டார். அவர்கள் எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். இதேபோல் பிற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும், மொழி தேர்வு மிக எளிமையாக இருந்ததாக கூறியுள்ளனர். முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Tags : Puducherry ,Tamil Nadu , Tamil Nadu, Puducherry, Plus-2 General Examination, Students are happy
× RELATED அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா...