பெண் எஸ்ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (23). இவரது மனைவி துரைச்சி. வேலுச்சாமி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துரைச்சி, சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்திற்கு சென்று வேலுச்சாமி மீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இருவரையும் அழைத்து சமாதானப்படுத்தி இனிமேல் பிரச்னை வரக்கூடாது என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று வேலுச்சாமி, சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த பெண் எஸ்ஐ உமாவிடம், நீங்கள் சொல்லி நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து பெண் எஸ்ஐ உமா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வேலுச்சாமியை கைது செய்தனர்.

Related Stories: