சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரியை 17-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சென்னை சேப்பாக்கத்தில் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது. இங்கு மறைந்த தமிழ்நாடு முதல்வர் அண்ணாவின் நினைவாக அமைந்துள்ள அண்ணா பெவிலியன் அமைந்துள்ளது.சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு பெவிலியன்கள் புதிதாக கட்டப்பட்டு உள்ளன. இந்த இரு பெவிலியன்களையும் வருகிற 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் சிகாமணி பேட்டி அளித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கேலரியை திறந்து வைத்து கலைஞர் பெயரை சூட்டுகிறார். இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது ஒரு நாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கட் மைதானத்துக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் தான் பழம்பெருமை வாய்ந்ததாக உள்ளது. இங்கு உள்ளூர் போட்டிகள் முதல் சர்வேதேச போட்டிகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகின்றன.

