×

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் தீவிரம்: அயோடின் உப்பு மட்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதால் உற்பத்தியாளர்கள் வேதனை

நாகை: வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.  நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளி, கடினால் வயல், கோடிய காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9,000 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியை உற்பத்தியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தற்போது இரவு பகலாக உப்பு உற்பத்தி செய்யும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால், அயோடின் கலந்த உப்பு மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற அறிவிப்பால் உப்பு விற்பனை தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உப்பு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு தளர்த்த வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   


Tags : Water, Salt, Manufacture, Iodine, Export, Manufacturer, Labour
× RELATED கலைஞரை போலவே ஸ்டாலின் தலைமையில் 40-க்கு...