×

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய முதல் நாளிலேயே முடங்கியது: இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய முதல் நாளிலேயே முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. இதில் ராகுல் காந்திக்கு எதிராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் தீர்மானம் கொண்டுவந்தார்.

ராகுல் காந்தி அண்மையில் லண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது இந்தியாவில் ஊடகம், நீதித்துறை, நாடாளுமன்றம் உட்பட ஜனநாயக அமைப்புகள் மீது கொடூர தாக்குதல் நடந்துவருவதாக கூறியிருந்தார்.

இதனை அடுத்து மாண்டியாவில் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணியை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி: இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் என்றும் நாம் கூறலாம். அனால், இந்திய ஜனநாயகம் குறித்து சிலர் லண்டனில் கேள்வி எழுப்புகின்றனர், இது நாட்டை அவமதிக்கும் செயல். ஜனநாயக பாரம்பரியம் மீது எந்த சக்தியாலும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவையில், ராகுல் காந்திக்கு எதிராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின் போது பேசிய ராஜ்நாத்சிங், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமைச்சர் ராஜ்நாத்சிங் தீர்மானம் கொண்டுவந்ததை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

பின்னர் நாடாளுமன்றம் தொடங்கிய போது, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என இரு அவைகளிலும் ஒன்றிய அமைச்சர்கள் பேசினார். அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Parliament , Parliament budget session, adjournment of both houses, Defense Minister Rajnath Singh, PM Modi
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...