×

சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும்: அமெரிக்க அரசு உறுதி

வாஷிங்டன்: சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என்று அமெரிக்க அரசு உறுதி அளித்துள்ளது. டெபாசிட்தாரர்களின் பணத்தைப் பாதுகாக்கும் வங்கியில் சிலிக்கான் வேலி வங்கிப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். இன்று முதல் எஸ்.வி. வங்கி டெபாசிட்தாரர்கள் தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெப்பன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தியதால் எஸ்.வி.பி எதிர்பாரா பாதிப்புக்குள்ளானது.

எஸ்.வி.பி. நெருக்கடியில் சிக்கியதை அறிந்த டெபாசிட்தாரர்கள் திரண்டு வந்து ரூ.3,44,012 கோடியை டெபாசிட்டை திருப்பி கேட்டனர். மொத்த டெபாசிட்தாரர்களும் ஒரே நேரத்தில் கணக்கில் இருந்து பணத்தை எடுத்ததால் வங்கி நெருக்கடியில் சிக்கியது. இந்நிலையில், சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என்று அமெரிக்க அரசு உறுதி அளித்துள்ளது.  அமெரிக்காவின் கலிப்போர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிலிக்கான் வேலி வங்கி  ஸ்டார்ட்அப் மற்றும் வென்சர் கேப்பிடல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதியுதவிகளை அளிக்கும் சேவைகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Silicon Valley Bank ,US Govt. , Silicon Valley Bank, Depositor, Money, US Govt
× RELATED இந்தோனேசியாவிற்கு விரைவில் 40 லட்சம்...