×

அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது: மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் பெற்ற கடன் விவரங்களை வெளியிட முடியாது என மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ், அதானி குழும விவகாரம் குறித்தும், அதானி நிறுவனம் எல்.ஐ.சி.யிடம் அதானி குழுமம் ரூ.6347 கோடி கடன் பெற்றுள்ளது குறித்தும் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், ஆர்பிஐ சட்ட விதிப்படி, எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது. 1934 சட்ட விதிகளின்படி, பொது நிறுவனத்தின் கடன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட கூடாது. நிறுவனத்திற்கு கடன் வழங்கிய குறிப்பிட்ட வங்கியானது, கடன் விவரங்களை ஆர்பிஐக்கு தெரிவித்துவிடும். அப்படி அளிக்கப்பட்ட ஆவணங்கள் பாதுக்கப்பாக வைத்து இறுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எல்ஐசி , அதானி நிறுவனத்திற்கு வழங்கிய கடனானது டிசம்பர் 31 வரையில் 6,347 கோடியாகும். அது தற்போது,  6,182 கோடியாக குறைந்துள்ளது எனவும்  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி குழுமம் கடன் விவரங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பதில் அளித்துள்ளார்.


Tags : Adani ,Minister ,Nirmala Sitharaman ,Lok Sabha , Adani, Loan, Details, Can't Disclose, Lok Sabha, Nirmala Sitharaman, Answer
× RELATED தென்னிந்திய சிமெண்ட் விற்பனையில்...