×

சமையல் எரிவாயு விலை உயர்வு; இந்தியா - சீனா எல்லை பிரச்சனை குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் நோட்டீஸ்..!

டெல்லி: சமையல் எரிவாயு உயர்வு குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது. மார்ச் மாதம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

அதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 223 அதிகரித்துள்ளது.  இதன் மூலம் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் ரூ. 2,268க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென்றும், எரிவாயு மானியத் தொகையை முழுமையாக வழங்கிட வேண்டுமென்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், சமையல் எரிவாயு உயர்வு குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது. அவை அலுவலகங்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது. வருகிற தினங்களில் இந்தியா- சீன எல்லை விவகாரத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறையானது கணித்திருக்கிறது. இந்தியாவின் மேற்கு எல்லை பகுதிகளை பெரும்பாலும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே பகிர்ந்து கொள்கிறது. இதில் சீனா-பாகிஸ்தான் இடையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் எல்லை பிரச்சனை நிலவுகிறது.

இந்நிலையில் வரும் நாட்களில் இந்தியாவுக்கு எதிராக சீன எல்லை பிரச்சனைகள் அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை அந்நாட்டு எம்பிகளிடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இந்தியா - சீனா எல்லை பிரச்சனை குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது. அவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

Tags : Congress ,India ,China ,Lok Sabha , Cook, Gas, Rise, India - China, Trouble, Lok Sabha, Congress, Notice
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...