×

திருச்சியில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க அமைச்சர் கோரிக்கை

சென்னை: கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் உயிரிழந்த இளைஞருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என ஆய்வு நடக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 113 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது. நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சலை தடுக்க அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தபட்டு வருகின்றன.

காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம்காட்டி வரும் நிலையில், கடந்த சிலநாட்களாக ஓமிக்ரான் வகை கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் புதிதாக 40 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மற்றும் கோவையில் தலா 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் பணியாற்றி வந்த திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கோவாவுக்கு சுற்றுலா சென்று கடந்த 9-ம் தேதி ஊருக்கு திரும்பியுள்ளார். பின்னர் அவர் மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஒரு வாரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையே அடுத்து உயிரிழந்த இளைஞருடன் கோவா சென்ற 4 பேர் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிமைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதால் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3,618-ஆக பதிவாகியுள்ளது.


Tags : Trichy ,Minister , Trichy, Corona Prevention Protocol, Ministerial Request, Health Department
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...