×

ஜம்முவில் பெண்ணை கொன்று உடலை கூறு போட்டு புதைத்தவர் கைது

ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீரின் சோய்புக் பகுதியை சேர்ந்த தன்வீர் அகமத் கான் என்பவர், பயிற்சி வகுப்புக்கு சென்ற தன் 30 வயது சகோதரியை காணவில்லை என சோய்புக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மொகந்த்பொரா புட்காம் பகுதியை சேர்ந்த ஷபீர் அகமது வானி(45) உள்ளிட்ட சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஷபீர் அகமது வானி, காணாமல் போனதாக கூறப்பட்ட பெண்ணை கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து, பெண்ணின் உடல் பாகங்களை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தனது உறவினரை திருமணம் செய்த மறுத்ததால் அந்த பெண்ணை அவர் கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : Jammu , Man arrested for killing woman and burying her body in Jammu
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை