×

அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட சீன ராணுவ அமைச்சராக ஜெனரல் லீ ஷாங்பூ நியமனம்

பீஜிங்: சீன ராணுவ அமைச்சராக ஜெனரல் லீ ஷாங்பூ சீன தேசிய மக்கள் காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் ஜி ஜின் பிங் தலைமையிலான சீன ராணுவத்தின் உயர் மத்திய ராணுவ ஆணையத்தின் உறுப்பினராகவும் லீ ஷாங்பூ நியமனம் செய்யப்பட்டார். ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறி, கடந்த 2018ம் ஆண்டு, அப்போது சீன மக்கள் விடுதலை ராணுவ செயலாளராக இருந்த லீ ஷாங்பூ, ரஷ்யாவிடம் இருந்து சுகோய்-35 ரக போர் விமானங்களையும், எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கினார். இதனால் இவருக்கு எதிராக அமெரிக்கா தடைவிதித்தது. இப்போது, லீ ஷாங்பூ ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது, சீனா- அமெரிக்கா இடையேயான உறவில் மேலும் விரிசலை உருவாக்கும்.



Tags : General ,Li Shangpu ,China ,Minister of Defense ,United States , General Li Shangpu's appointment as China's Minister of Defense was blocked by the United States
× RELATED பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எடப்பாடி வாழ்த்து