×

ஒவ்வொரு தேர்தலும் ஆணையத்திற்கு ‘அக்னி பரீட்சை’: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

பெங்களூரு: ஒவ்வொரு தேர்தலும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ‘அக்னி பரீட்சை’ என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார். கர்நாடா பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்திய  தலைமை தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார், நிருபர்களிடம் கூறுகையில், ‘கர்நாடக  சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடையும்; அதற்கு  முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதுவரை 400 மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 17 நாடாளுமன்றத் தேர்தல்கள், 16 குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களை நடத்தியுள்ளது.

ஆனால் ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும், இந்திய தேர்தல் ஆணையம் தனக்கான ‘அக்னி பரீட்சை’ வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில், இந்தியா தனது சமூக, கலாசார, அரசியல், புவியியல், பொருளாதார, மொழியியல் பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்வு கண்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் முடிவுகளை மக்கள் நம்புவதால் மட்டுமே இது சாத்தியமாகிறது. சுதந்திரமான மற்றும் நியாயமான  தேர்தலை நடத்துவதால், மக்கள் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்’ என்றார்.

Tags : Every election is a 'Fire Test' for Commission: Chief Election Commissioner Interview
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...