×

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தங்க சாலை மணிக்கூண்டு அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச்  செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழக ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர், முத்தரசன் பேசியதாவது:   ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனை தடுக்க வேண்டிய ஆளுநர் சூதாட்ட நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தற்கொலையை தூண்டும் விதமாக செயல்படுகிறார். உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் செல்லும் இடங்கள் எல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.  ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் ரேணுகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Governor R. N.N. ,Ravi , Demonstration against Governor RN Ravi
× RELATED குவைத் தீவிபத்தில் விலைமதிப்பற்ற...