×

அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

கோவில்பட்டி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறை அதிகாரியாக இருந்தபோது செய்த ஊழல்களின் பட்டியலை வெளியிடுவேன் என்று ஆர்.எஸ்.பாரதி பேசினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி சீண்டிப் பார்க்கிறார். இதை எடுத்து சொன்னால் மிரட்டும் பாணியில் அண்ணாமலை போன்றோர் பேசுகின்றனர்.ஏப்ரல் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாக அண்ணாமலை கூறுகிறார். மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று, அண்ணாமலை காவல்துறையில் பணியாற்றிய போது புரிந்த ஊழல் பட்டியலை நான் வெளியிடுவேன். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

Tags : Anamalai ,S.S. ,Bharati , I will publish the list of Annamalai scandal: RS Bharati speech
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்