தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல்: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் புதிய நிர்வாகிகளுக்கான நேர்காணல் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஓபிசி பிரிவின் மாநில தலைவர் நவீன் தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மேலிட பொறுப்பாளர் மோகன் நாயுடு முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் இணை பொறுப்பாளர்கள் குச்சூரி வெங்கடேஷ், கத்தி வெங்கடசாமி, அமித் பட்வா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, எஸ்.சி. பிரிவின் மாநில தலைவர் ரஞ்சன் குமார், சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லாம் பாஷா, மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில தலைவர் நவீன் கூறுகையில், ‘‘ராகுல் காந்தியை பிரதமராக்கும் வகையில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் சந்திப்பு நடைபெற்றது. இந்த நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நிர்வாகிகள் பட்டியல் வரும் மார்ச் 21ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மூலம் வெளியிடப்படும்’’என்றார்.

Related Stories: