×

இந்தியா நிதியில் மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிய இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு கடும் பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.   அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா  ரூ.8197 கோடி கடன் உதவி  அளித்தது.  கொழும்பில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா வழங்கிய நிதியில் ரூ.82 கோடியை மாணவர்களுக்கு புத்தங்கள் வாங்குவதற்கும், நோட்டு புத்தகங்களை அச்சிடவும் அந்த நாடு செலவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.  இந்த நிதி மூலம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. 


Tags : Sri Lanka ,India , Government of Sri Lanka bought books for students with India funds
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு