ரெய்டுகளுக்கு பயந்து ஒருபோதும் கட்சி மாறமாட்டார் கவிதா: ஐதராபாத்தில் '#Bye Bye Modi'என்ற ஹேஷ் டேக்கு விளம்பரங்கள்

ஐதராபாத்: ரெய்டுகளுக்கு பயந்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகராவின் மகள் கவிதா கட்சி மாறமாட்டார் என்பதை குறிக்கும் வகையில் அம்மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகராவின் மகள் கவிதா டெல்லியில் ஒன்றிய அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பாரத் இராட்டிர சமிதி தொண்டர்கள் வித்தியாசமான விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். உண்மையான நிறம் என்றும் சாயம் போவதில்லை என்ற வாசகங்கள் அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அசாம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் தலைவர்கள் பாஜகவின் ரெய்டு நெருக்கடிக்கு பயந்து பாஜகவின் சேர்ந்துவிட்டதை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் கவிதா அப்படி நிறமாறப்பட்டார் என்று குறிப்பிட்டு அந்த விளம்பரங்கள் நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக #Bye Bye Modi என்ற ஹேஷ் டேக்கும் அதில் இடம் பெற்றுள்ளது.

Related Stories: