×

தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை: தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக் கொல்லிகளுக்கு அரசு நிரந்தரத்தடை விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே 60 நாட்களுக்கு தற்காலிகத் தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்தது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், குளோர்பைரிஃபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், சைபர்மெத்ரின், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின் உள்ளிட்ட பூச்சிக் கொல்லிகளுக்கும் நிரந்தர தடை விதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu , Possibility of suicide, 6 dangerous pesticides, permanent ban, Tamil Nadu Govt
× RELATED 2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய...