×

திருஷ்டி கழிக்க அழைத்து சென்று மூதாட்டியிடம் செயின் அபேஸ்: மர்ம நபருக்கு வலை

சென்னை: கோடம்பாக்கத்தில் திருஷ்டி கழித்தால் ரூ.2 ஆயிரம் தருவதாக கூறி அழைத்து சென்று மூதாட்டியின் செயினை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அரக்கோணத்தை சேர்ந்தவர் வசந்தா (67). இவர் கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா கலனியில் தங்கி, வீட்டு வேலை செய்து வருகிறார். வசந்தா நேற்று முன்தினம் வீட்டு வேலை முடிந்து கோடம்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒருவர் வசந்தாவை வழிமறித்து, வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தைகக்கு பிறந்த நாள், இதனால் திருஷ்டி கழிக்க வேண்டும். அதற்காக ரூ.2 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார்.

பணம் தருவதாக கூறியதால் வசந்தாவும் அதற்கு ஒப்புக்கொண்டு வருவதாக கூறியுள்ளர். பிறகு கழுத்தில் நகைகள் அணிந்து வந்தால் அவர்கள் உங்களை வசதியானவர் என்று பணம் தர மாட்டார்கள், நீங்கள் உங்கள் நகைகளை கழிற்றி பேப்பரில் மடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி மூதாட்டியும் தனது செயின், கம்மல் என 4 சவரன் நகைகளை கழற்றியுள்ளார். அப்போது, அந்த நபர் வைத்திருந்த பேப்பரில் அவற்ற மடித்து கொடுத்துள்ளார்.

சிறிது தூரம் சென்றதும், நீங்கள் இங்கேயே இருங்கள் நான் வந்து அழைத்து செல்கிறேன் என்று கூறி சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் அந்த நபர் திரும்ப வரவில்லை. இதனால் மூதாட்டி பேப்பரில் படித்து வைத்திருந்த நகைகளை பிரித்து பார்த்த போது, அதில் ஒன்றரை சவரன் செயின் மட்டும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று நூதன முறையில் நகையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags : Chain Abbess ,Trishti , Chain Abbess to the Old Woman for Trishti: Web for the Mysterious Person
× RELATED தக்கலை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணின் செயின் அபேஸ்