×

சப்தம் படத்தில் இணைந்த லைலா

சென்னை: அறிவழகன் இயக்கும் சப்தம் படத்தில் முக்கிய வேடத்தில் லைலா நடிக்கிறார். நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து, பார்த்தேன் ரசித்தேன், தில்லு உள்பட பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் லைலா. கடைசியாக 2006ம் ஆண்டு அஜித் ஜோடியாக திருப்பதி படத்தில் நடித்தார். அதன் பிறகு மெஹதி என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். நடிப்பதையும் நிறுத்திவிட்டார். இப்போது அவரது மகன்கள் வளர்ந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு கார்த்தி நடித்த சர்தார் படத்தில் நடித்தார். அதேபோல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்த வதந்தி வெப்சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன் என லைலா தெரிவித்தார். இதற்காக பட வாய்ப்புகளுக்கும் அவர் வலை வீசி வந்தார். ஈரம், குற்றம் 23, வல்லினம், ஆறாது சினம் படங்களை அறிவழகன் இயக்கினார். இப்போது ஆதி நடிப்பில் சப்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். திரில்லர் பாணி படமாக இது உருவாகி வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க லைலா ஒப்பந்தமாகியுள்ளார். அவர் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.

Tags : Laila , Laila joins the movie Sabdam
× RELATED நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு...